தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பெண்களின் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு

பெண்களின் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு

பெண்களின் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு


ADDED : மார் 11, 2026 08:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்:ப.வேலுார் அருகே, பொத்தனுாரில் செயல்பட்டு வரும் வேர்டு நிறுவனம் சார்பில், உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து சமுதாய கூடத்தில், பெண்-களின் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

வள்ளுவர் அறிவியல் மற்றும் வேளாண்மை கல்லுாரி பேராசி-ரியர் சுதாதேவி, முந்தைய காலத்தில் சாதனை படைத்த பெண்ம-ணிகளின் வரலாறு மற்றும் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் அதனை எப்படி கையாள்வது, என பேசினார்.

தொடர்ந்து பாண்டமங்கலம், டவுன் பஞ்சாயத்து செயல் அலு-வலர் கிருஷ்ணவேணி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து கவிதை நடையில் எடுத்-துரைத்தார்.

பேச்சாளராக பங்கேற்ற வக்கீல் தனலட்சுமி, பெண்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

முன்னதாக, வேர்டு நிறுவன செயலாளர் சிவகாமவல்லி வர-வேற்றார். நிறுவன ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், அபினேஷ் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us