/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு நலத்திட்டங்கள் குறித்து நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு
/
அரசு நலத்திட்டங்கள் குறித்து நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு
அரசு நலத்திட்டங்கள் குறித்து நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு
அரசு நலத்திட்டங்கள் குறித்து நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : டிச 13, 2024 01:26 AM
ராசிபுரம், டிச. 13-
ராசிபுரம் ஒன்றியத்தில், அரசு நலத்திட்டங்கள் குறித்து கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராசிபுரம் சுற்று வட்ளில் அதிகம் பேர் கைத்தறி, விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நெசவாளர்களுக்கு, அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்வது இல்லை. இதையடுத்து, நெசவாளர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன்படி, ராசிபுரம் ஒன்றியம் கூனவேலம்பட்டி புதுார் பகுதியில் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருச்செங்கோடு கைத்தறி துணி நுால் உதவி இயக்குனர் ஜெயவேல் கணேஷ் தலைமை வகித்தார். முன்னாள் பஞ்., துணைத்
தலைவர் சரணவன், கைத்தறிச்சங்க செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் குறித்து விளக்கப்பட்டது. கைத்தறி கூட்டுறவு சங்கத்தில், பல ஆண்டுகள் தறி தொழில் செய்த மூத்த முன்னோடிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர். விசைத்தறி ஊழியர்கள், உரிமையாளர்கள், கைத்தறி, விசைத்தறி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.