/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காஸ் நுகர்வோருக்கு விழிப்புணர்வு முகாம்
/
காஸ் நுகர்வோருக்கு விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 24, 2025 06:31 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, பாதரை பகுதியில் உள்ள காஸ் நுகர்வோர்களுக்க காஸ் சிலிண்டர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம், தனியார் ஏஜன்சி மூலம் நடந்தது. முகாமில், காஸ் சிலிண்டர் கையாளுதல், அடுப்பு பராமரிப்பு, கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், காஸ் கசிவு ஏற்பட்டால், உடனடியாக சிலிண்டர் வால்வை மூடி, காற்றோட்டம் உள்ள இடத்திற்கு செல்லவும். சிலிண்டரை கையாள்வதற்கு முன், கசிவு ஏதும் உள்ளதா என சரிபார்க்கவும். அடுப்பை துாய்மையாக பராமரிக்கவும், பயன்படுத்திய பின் அடுப்பை மூடி வைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.