/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உழவர்சந்தைக்கு விவசாயிகள் அதிகளவு வருகை தர விழிப்புணர்வு முகாம்
/
உழவர்சந்தைக்கு விவசாயிகள் அதிகளவு வருகை தர விழிப்புணர்வு முகாம்
உழவர்சந்தைக்கு விவசாயிகள் அதிகளவு வருகை தர விழிப்புணர்வு முகாம்
உழவர்சந்தைக்கு விவசாயிகள் அதிகளவு வருகை தர விழிப்புணர்வு முகாம்
ADDED : டிச 22, 2024 01:19 AM
நாமக்கல், டிச. 22-
வேளாண் வணிகம் சார்பில், உழவர் சந்தைக்கு விவசாயிகள் அதிகளவில் வருகை தர விழிப்புணர்வு முகாம், எருமப்பட்டி ஒன்றியத்தில் நடந்தது.
நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு நாமக்கல், மோகனுார், பரமத்தி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை, புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை விவசாயிகள் அறுவடை செய்து, கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தினமும் சராசரியாக, 22 முதல், 25 டன், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், 30 முதல், 35 டன்கள் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக, 1,568 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உழவர்சந்தைக்கு மேலும், காய்கறி, பழங்கள் அதிகளவில் கொண்டு வரும் வகையில், விவசாயிகளின் வருகையை அதிகரிக்க, ஒவ்வொரு ஒன்றியத்திலும், விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, எருமப்பட்டி ஒன்றியம், கோணாங்கிபட்டி கிராமத்தில், வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) நாசர் அறிவுறுத்தலின்படி நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து, உழவர் சந்தையில் மொத்த விலை, சில்லரை விலை நிர்ணயம் செய்யும் முறை, சந்தையின் நிர்வாகம் குறித்து விளக்கினார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபி, உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கோகுல் ஆகியோர், தங்கள் துறைகள் குறித்து விளக்கினர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.