sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உலக மண் தின விழாவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

/

உலக மண் தின விழாவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

உலக மண் தின விழாவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

உலக மண் தின விழாவில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு


ADDED : டிச 08, 2025 09:16 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் வட்டார வேளாண் துறை சார்பில், விட்டமநாய்க்கன்பட்டி கிராமத்தில், விவசாயிக-ளுக்கு மண் தின விழா முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா வரவேற்றார். வேளாண் துணை இயக்-குனர் கவிதா முன்னிலை வகித்தார்.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மல்லிகா தலைமை வகித்து பேசியதாவது:

உலக மண் தின விழா முக்கிய நோக்கமான, வள-மான மண், வளமான நகரங்கள் குறித்து விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம், பயிர் வளர்ச்சிக்கு, மண்ணில் உள்ள ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், மகசூல் பெருக்கத்திற்கு உயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் அவ-சியம். மண்ணின் வளங்களை பராமரிப்பதுடன், மண் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். அதேபோல், மண் அரிப்பை குறைத்து, உணவு உற்பத்தியை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் மோகன், சந்திர-சேகரன், கோகிலா ஆகியோர், மண் பரிசோத-னையின் முக்கியத்துவம், மண் மாதிரி, நீர் மாதிரி எடுக்கும் வழிமுறை, தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் மூலம், சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி, பயிரின் உற்பத்தியை அதிகரிக்கவும்; மண்ணின் தன்-மைக்கு ஏற்ப சரியான பயிர் ரக தேர்வு மற்றும் சரியான அளவு உரதேர்வு ஆகியவற்றை மேற்-கொண்டு, அதிக மகசூல் பெறலாம் என விளக்-கினர்.

உதவி வேளாண் அலுவலர் பெரியசாமி, வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை திட்ட அலுவலர்கள் ரமேஷ், கவிசங்கர், நதியா, முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us