/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
/
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 27, 2024 03:56 AM
நாமக்கல்: சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி, நாமக்கல்லில் விழிப்புணர்வு மனித சங்கிலி, பேரணி நடந்தது.
ஆண்டுதோறும், ஜூன், 26ல் சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் உமா அறிவுறுத்தல்படி, சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில், சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்ட விரோதமான கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி, விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சுமன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், டி.ஆர்.ஓ., சுமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பள்ளி முன் துவங்கிய பேரணி, ஸ்டேட் பாங்க், திருச்சி சாலை, மணிக்கூண்டு, மோகனுார் சாலை வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில்
முடிந்தது.
பேரணியில், போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது.
கூடுதல் எஸ்.பி., தனராசு, கலால் உதவி ஆணையர் புகழேந்தி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அருண், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், கோகுல்நாதா மிஷன் நிர்வாகி மாதையன், என்.சி.சி., மாணவ, மாணவியர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.