/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி
/
பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 28, 2025 07:01 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை பயன்படுத்துவதை தவிர்க்க, டவுன் பஞ்., அலுவலகம் முன் விழிப்புணர்வு பேரணி நடந்தது. செயல் அலுவலர் ஆறுமுகம், தலைவர் சேரன், துணைத்தலைவர் அன்பழகன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், அரசுப்பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், துாய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதார சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர். மேலும், ஏரிக்கரை, ஆத்துார் பிரதான சாலை உள்ளிட்ட பொது இடங்களில் இருந்த மட்காத பிளாஸ்டிக், கேரி பேக்குகளை அகற்றினர். 65 கிலோ கேரி பேக்குகள் அகற்றப்பட்டன. 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

