/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்
/
பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஏப் 29, 2025 02:12 AM
ராசிபுரம்:
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி, ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பது, பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஸ் நிறுத்தம், திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள், சந்தை பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், பொருட்களை சேகரித்தனர். அதுமட்டுமின்றி மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, துணிப்பை பயன்படுத்துவது குறித்து உறுதிமொழி ஏற்றனர். பேரணியை செயல் அலுவலர் பிரபாகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், டவுன் பஞ்., தலைவர் சுப்ரமணியம், துணைத்தலைவர் காவேரி அம்மாள் கலந்து கொண்டனர்.