/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
நாமக்கல் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாமக்கல் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாமக்கல் அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 30, 2025 01:38 AM
நாமக்கல், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், சதுப்பு நில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்புக்கான சர்வதேச தினம், உலக இயற்கை பாதுகாப்பு தினம், உலகக் கல்லீரல் அழற்சி நாள், சர்வதேச புலிகள் தினம் மற்றும் சர்வதேச நட்பு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, 'இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் மாதவியாதவ், 'இவ்வுலக சூழலியல் மண்டலத்தை நிலை நிறுத்துவதில் வனவிலங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன எனவும், வனவிலங்குகள் உள்ள பகுதிகளில் மனித நடவடிக்கைகள் குறைக்கப்படும் போது, வன உயிரினங்களின் எண்ணிக்கையும் மேம்பாடு அடையும். புலிகளைப் பொறுத்தவரை, தேசிய அளவில் இதன் எண்ணிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகளின் சீறிய முயற்சிகளால் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது' என்றார்.
மாவட்ட கல்வி பயிற்சி நிலைய முதல்வர் செல்வம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை, தேசிய வைரஸ் ஹெபடைடிஸ் கட்டுப்பாட்டுத் திட்ட தொடர்பு அதிகாரி டாக்டர் மோகனவேல், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி ஆகியோர் பேசினர்.
கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.