sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேந்தமங்கலம் மணிக்கூண்டில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு

/

சேந்தமங்கலம் மணிக்கூண்டில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு

சேந்தமங்கலம் மணிக்கூண்டில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு

சேந்தமங்கலம் மணிக்கூண்டில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு


ADDED : பிப் 03, 2025 08:37 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., பழமைவாய்ந்த மணிக்கூண்டில் ஒலிப்பெருக்கி மூலம் மக்க-ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் எதிரே, கடந்த, 1965ல், 15 அடி உய-ரத்தில் கட்டப்பட்ட மணிக்கூண்டு உள்ளது. இந்த மணிக்கூண்டை பஸ் பயணிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள் பயன்படுத்தி வந்தனர். சில ஆண்-டுகளாக, இந்த மணிக்கூண்டு பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்தது. இதையடுத்து, டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் இந்த மணிக்கூண்டை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து, டவுன் பஞ்., தலைவர் தனபால் கூறியதாவது:

மிகவும் பழமை வாய்ந்த இந்த மணிக்கூண்டில் இருந்த கடிகாரம் பழுதடைந்திருந்தது. இதை மாற்றி, புதிய கடிகாரம் பொருத்தப்பட உள்ளது. இதேபோல், மணிக்கூண்டில் ஒலி பெருக்கி அமைத்து, அதில் டவுன் பஞ்., மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்; ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு அறிவிப்புகள், ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிப்பதற்கான நடவ-டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us