/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விபத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி செய்து உயிர்களை காப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி
/
விபத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி செய்து உயிர்களை காப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி
விபத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி செய்து உயிர்களை காப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி
விபத்தில் பொதுமக்களுக்கு முதலுதவி செய்து உயிர்களை காப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி
ADDED : அக் 01, 2025 01:51 AM
நாமக்கல், பத்தில்லா தமிழகம்' என்ற மாநில அரசின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், தமிழகம் முழுவதும், அதிக விபத்துகள் நடக்கும், 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், முதல் கட்டமாக, 50 இடங்களில், பொதுமக்களுக்கு சாலை விபத்துகள் நிகழ்ந்தால் எவ்வாறு முதலுதவி செய்து உயிர்களை காக்கலாம் என்ற பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த முயற்சி, தமிழக விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சி மற்றும் தமிழக சுகாதார அமைப்பு திட்டம் அறிவுறுத்தல்படி, 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கும் ஈ.எம்.ஆர்.ஐ., ஜி.ஹெச்.எஸ்., நிறுவனத்தின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கருங்கல்பாளையம், செல்வம் கல்லுாரி வரை, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கான முதலுதவி பயிற்சி, நாமக்கல் செல்வம் கல்லுாரியில் நடந்தது.
நாமக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர் லீலாதரன், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர்(வடக்கு) பதிவுநாதன், கல்லுாரி முதல்வர் ராஜவேல் ஆகியோர் பங்கேற்று, சாலை விபத்துகள் மற்றும் முதலுதவி குறித்த விளக்கி பேசினர். மேலும், 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையின் மண்டல மேலாளர் ஜெயகுமார், மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சின்னமணி, மனோஜ், நாமக்கல் மாவட்ட வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் ஆகியோர் கலந்து பேசினர்.
சென்னை தலைமை அலுவலக, 108 அவசர கால ஆம்புலன்ஸின் அவசர சிகிச்சை மேலாண் பயிற்சியாளர்கள் ஸ்டாலின், அனிதா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியின் போது, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு எவ்வாறு முதலுதவி வழங்க வேண்டும் என்பதை, செயல்விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். முடிவில், 'எந்த தயக்கமும் இன்றி, விபத்து நேரத்தில் முதலுதவி செய்ய முன்வர வேண்டும், என்றும், 'விபத்தில்லா தமிழகம்' என்ற இலக்கை அடைவோம்' என, உறுதிமொழி ஏற்றனர்.
சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும், 'முதலுதவி கையேடு' மற்றும்
சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.