/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில் ஆயுதபூஜை கோலாகல கொண்டாட்டம்
/
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில் ஆயுதபூஜை கோலாகல கொண்டாட்டம்
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில் ஆயுதபூஜை கோலாகல கொண்டாட்டம்
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில் ஆயுதபூஜை கோலாகல கொண்டாட்டம்
ADDED : அக் 12, 2024 01:13 AM
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில்
ஆயுதபூஜை கோலாகல கொண்டாட்டம்
நாமக்கல், அக். 12-
நாமக்கல் மாவட்டத்தில், வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில், ஆயுதபூஜை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஆயுதபூஜை, நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுதும், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், பட்டறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும், டூவீலர், கார், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் வாட்டர் வாஷ் செய்யப்பட்டு, சந்தனம், குங்குமம் தெளித்து, பூ, மாலை போட்டு அலங்கரித்தனர்.
தொடர்ந்து, வாழை மரம், வண்ண ஜிகினா காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களால் வீடு, வர்த்தக நிறுவனங்களை அலங்கரித்தனர். இதையடுத்து, பொங்கல், பொரி, சுண்டல், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து, பூஜை செய்து வழிபட்டனர். பணியாளர்கள், உறவினர்கள், பொதுமக்களுக்கு பொங்கல், பொரி கொடுத்து உற்சாகமாக ஆயுதபூஜையை கொண்டாடினர். மேலும், பல நிறுவனங்களில் பூஜை முடிந்த கையோடு திருஷ்டி பூசணியை விதிமுறைகளை மீறி சாலையில் உடைத்தனர்.
* நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சென்டர் ஹாலில், கல்வி கடவுளான சரஸ்வதி தேவி சிலை உள்ளது. சிலைக்கு புதிய வர்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்பட்டது. தொடர்ந்து, தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.