/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
7 வகை சாப்பாட்டுடன் அம்மனுக்கு வளைகாப்பு
/
7 வகை சாப்பாட்டுடன் அம்மனுக்கு வளைகாப்பு
ADDED : ஆக 09, 2024 03:33 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையம் வட பத்தி-ரகாளியம்மன் கோவிலில், 7 வகை சாப்பாடுடன், அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்-திபாளையம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற வட பத்திரகாளி-யம்மன்கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி தினங்கள் மட்-டுமின்றி ஆடி, தை மாதங்களில் வெள்ளிக்கிழமை, முக்கிய விரத தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இந்-நிலையில் ஆடி பூரத்தையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நேற்று தக்காளி, புளி, எலுமிச்சை, தேங்காய், தயிர், மாங்காய், கொத்தமல்லி என 7 வகையான சாப்பாடு மற்றும் பலகாரம் செய்து அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். முன்னதாக சிறப்பு அபிேஷகம் பூஜை நடந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமிக்கு அலங்கரித்திருந்த வளையல்கள், மஞ்சள் கயிறு ஆகியவை பெண்களுக்கு வழங்கப்பட்டது. இன்று ஆடி வெள்ளியை ஒட்டி, 108 இளநீர் அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைக்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.