/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலூர் டவுன் பஞ்.,ல் வரி செலுத்தாதவர்களுக்கு கெடு
/
ப.வேலூர் டவுன் பஞ்.,ல் வரி செலுத்தாதவர்களுக்கு கெடு
ப.வேலூர் டவுன் பஞ்.,ல் வரி செலுத்தாதவர்களுக்கு கெடு
ப.வேலூர் டவுன் பஞ்.,ல் வரி செலுத்தாதவர்களுக்கு கெடு
ADDED : மார் 07, 2024 02:13 AM
ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்.,க்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாத உரிமையாளர்கள் மற்றும் குடிநீர் வரி, சொத்து வரி கட்டாத உரிமையாளர்களுக்கு வரும், 15க்குள் வரி செலுத்த கெடு விதித்துள்ளனர்.
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு, காலி நில வாடகை, டவுன் பஞ்சாயத்து கடைகள் மற்றும் சொத்து வரி, குடிநீர் வரி என உரிமையாளர்களிடம் வாடகை மற்றும் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதில், வாடகை, வரி செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளனர். இது தொடர்பாக டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசு சார்பில், உடனடியாக வாடகை மற்றும் சொத்துவரி, குடிநீர் வரி வரும், 15க்குள் செலுத்த அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அலுவலக பணியாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாத கட்டடத்தில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

