/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கெட்டுப்போன கேக் விற்ற பேக்கரிக்கு ரூ.4,000 அபராதம்
/
கெட்டுப்போன கேக் விற்ற பேக்கரிக்கு ரூ.4,000 அபராதம்
கெட்டுப்போன கேக் விற்ற பேக்கரிக்கு ரூ.4,000 அபராதம்
கெட்டுப்போன கேக் விற்ற பேக்கரிக்கு ரூ.4,000 அபராதம்
ADDED : ஜூன் 22, 2025 12:57 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த பாச்சல் தேசிய நெடுஞ்சாலையில், நைனாமலை ஐயங்கார் பேக்கரி உள்ளது.
இக்கடையில் சில தினங்களுக்கு முன், பெண் ஒருவர் தன் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட, ஒரு கிலோ கிரீம் கேக் வாங்கி சென்றுள்ளார். குழந்தை கேக் வெட்டி ஊட்டிய பின், பெற்றோர் சாப்பிட வெட்டியுள்ளனர். அப்போது தான் கேக்கின் உள்ளே கெட்டுப்போன நாற்றம் வந்துள்ளது.
அது மட்டுமின்றி பூஞ்சையும் வளர்ந்திருந்தது.இதையடுத்து, குழந்தையின் தாய் பேக்கரி கடைக்கு வந்து உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீங்கள் தானே உரிமையாளர், உங்கள் கடை கேக்கை நீங்களே சாப்பிடுங்கள் என வாயில் ஊட்டிவிட்டார். இந்த வீடியோ, இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் சோதனை நடத்தினர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள் பயன்படுத்துவது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, உணவு பொருட்களுக்கான தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பேக்கரி உரிமையாளர் குணசேகரனுக்கு, 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.