ADDED : ஆக 29, 2024 07:53 AM
மோகனுார்: மோகனுார், பேட்டப்பாளையம் பஞ்., காவிரி ஆற்றங்கரையில், அருங்கரை சந்தனம் நாச்சிமார் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பாலாலய பூஜை நடந்தது.
முன்னதாக, நேற்று முன்தினம், காலை, 6:00 மணிக்கு, முதல் கால யாக சாலை பூஜை, கணபதி வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று, இரண்டாம் நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. 2ம் கால யாகசாலை பூஜையை, சிவாச்சாரியார்கள் முன்நின்று நடத்தினர். பூர்ணாகுதியுடன், கலச புறப்பாடு, கோவிலை சுற்றி வந்து, அத்தி மரத்தில் வரையப்பட்ட அருங்கரை அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, புனித கலச தீர்த்தம் ஊற்றப்பட்டு பாலாலய பூஜை நடந்தது.
அதையடுத்து, பூக்களால் அலங்கரித்து, மகாதீபம் காண்பிக்கப்பட்டது. நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.