/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலெக்டர் ஆபீசில் சிக்கிய 'கட்டு விரியன்'
/
கலெக்டர் ஆபீசில் சிக்கிய 'கட்டு விரியன்'
ADDED : மே 13, 2025 02:14 AM
நாமக்கல் :நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் பயன்பாட்டிற்காக பெரிய தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. அந்த தண்ணீர் தொட்டியில் பெண் ஊழியர் ஒருவர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வீரர்கள், தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி, அதில் பதுங்கி இருந்த, இரண்டு அடி நீளமுள்ள, 'கட்டு விரியன்' பாம்பை லாவகமாக பிடித்தனர். பின், அந்த பாம்பை காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பகுதி முட்புதராக காட்சியளிக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விஷ ஜந்துக்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.