ADDED : பிப் 24, 2024 03:22 AM
மல்லசமுத்திரம்: தமிழக கிராம பேங்க் ஆபீசர்ஸ் அசோசியேஷன், தமிழக கிராம பேங்க் ஒர்க்கர்ஸ் யூனியன், தமிழக கிராம பேங்க் ரிடைரீஸ் சங்கங்கள் சார்பில், ஸ்பான்சர் வங்கிகளின் பிடியில் இருந்து வங்கிகளை விடுவித்து, தேசிய கிராம வங்கிகளை உருவாக்க வேண்டும். கிராம
வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்காலிக கடைநிலை ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பென்ஷன் திட்டத்தை, வணிக வங்கிகளை போல் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட், கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை சரியான முன் தேதியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மல்லசமுத்திரம் தமிழக கிராம வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கி பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் பாதிப்படைந்தனர்.