ADDED : மே 21, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:நாமக்கல், வேலகவுண்டம்பட்டி அருகே, அக்லாம்பட்டி பகுதியில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த ரவி, 55, பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை, பூசாரி ரவி, பூஜை செய்ய வந்தபோது, கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து புகார்படி, வேலகவுண்டம்பட்டி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
