/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தை கடக்க தடை
/
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தை கடக்க தடை
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தை கடக்க தடை
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலத்தை கடக்க தடை
ADDED : அக் 07, 2024 03:48 AM
ப.வேலுார்: -சேலம் மாவட்டம், ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் உற்-பத்தியாகும் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்-ளது. இதனால், திருமணிமுத்தாறு பாய்ந்து செல்லும் பாதையில் உள்ள தடுப்பணை, குளங்கள் நிறைந்துள்ளன. மேலும், பரமத்தி அருகே, 400 ஏக்கரில் அமைந்துள்ள இடும்பன் குளம் திருமணி-முத்தாற்றில் அதிகளவு தண்ணீர் வந்ததால், விரைவில் நிறைய வாய்ப்புள்ளது.
இதையடுத்து, பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளைக-ளத்துார், கூடச்சேரி, பில்லுார், ராமதேவம் உள்ளிட்ட பகுதிகளில், திருமணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தில் வெள்ளநீர் செல்வதால்,
அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்வையிட்ட ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார், இரவு நேரத்தில் மழை பெய்தால் தண்ணீர் வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளது.இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்க வேண்டும். மேலும் தரைமட்ட பாலத்தின் மீது தண்ணீர் செல்-வதால், வாகனங்கள், பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தினார். ராமதேவம் வி.ஏ.ஓ.,
ராஜாமணி தலை-மையில் அப்பகுதியில் வருவாய்த்துறை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

