/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆஞ்சநேயர் கோவில் முன் 'பேரிகார்டு' வாகனங்கள் நிறுத்த இடமின்றி தவிப்பு
/
ஆஞ்சநேயர் கோவில் முன் 'பேரிகார்டு' வாகனங்கள் நிறுத்த இடமின்றி தவிப்பு
ஆஞ்சநேயர் கோவில் முன் 'பேரிகார்டு' வாகனங்கள் நிறுத்த இடமின்றி தவிப்பு
ஆஞ்சநேயர் கோவில் முன் 'பேரிகார்டு' வாகனங்கள் நிறுத்த இடமின்றி தவிப்பு
ADDED : ஏப் 30, 2025 01:35 AM
நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டால், வாகனம் நிறுத்த இடமின்றி, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
நாமக்கல்லில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாத முதல் ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பின்போது உள்ளூர், வெளியூர் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவில் முன் தாறுமாறாக தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதன் காரணமாக, மற்ற பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, கோவில் முன் வாகனங்களை நிறுத்த முடியாதபடி, 'பேரிகார்டு'கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனால், டூவீலரில் வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த இடவசதியின்றி தவித்து வருகின்றனர். மேலும், புதிதாக வாகனங்கள் வாங்கி வரும் பக்தர்கள், கோவில் முன் நிறுத்தி பூஜை செய்ய முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். எனவே, வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும், வாகனங்களுக்கு பூஜை செய்யவும் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.