/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பேட்டரி திருட்டு சகோதரர்கள் கைது
/
பேட்டரி திருட்டு சகோதரர்கள் கைது
ADDED : டிச 05, 2024 07:23 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர், நேற்று முன்தினம் வீட்டின் முன் சரக்கு வாகனத்தை நிறுத்-தியிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது, வாகனத்தில் இருந்த பேட்டரி திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில்,
ஆலாம்பாளையம் அடுத்த ஆசி-ரியர் காலனி பகுதியை சேர்ந்த பிரகாஷ், 23, இவரது தம்பி தர்மன், 21, ஆகிய
இருவரும், வாகனத்தில் இருந்து பேட்டரி திரு-டியது தெரியவந்தது.இதையடுத்து, சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, 3 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் பல வாகனங்களில் பேட்டரியை திருடியது தெரியவந்துள்ளது.