sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிறந்த நுாலகத்திற்கு விருது வழங்கல் வரும் 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

/

சிறந்த நுாலகத்திற்கு விருது வழங்கல் வரும் 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சிறந்த நுாலகத்திற்கு விருது வழங்கல் வரும் 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சிறந்த நுாலகத்திற்கு விருது வழங்கல் வரும் 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : டிச 12, 2024 01:26 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 12-

'தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறந்த நுாலகம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அதனால், தகுதியானவர்கள் வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

'வீடுதோறும் நுாலகம் அமைக்க வேண்டும்' என்ற நோக்கத்தில், மாவட்டந்தோறும் தமிழக அரசு புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது. வீடுகளில் நுாலகங்களை அமைத்துள்ள வாசகர்களை கண்டறித்து விருது வழங்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நுாலகங்களில், சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நுாலகத்தை தேர்ந்தெடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் புத்தக திருவிழாவின் போது, 'விருது, சான்றிதழ்' வழங்கப்படுகிறது.

அதனால், புத்தக ஆர்வலர்கள், நுாலகம் அமைத்து பராமரித்து வருவோர், தங்களது நுாலகம், பராமரிக்கப்பட்டு வரும் நுால்களின் எண்ணிக்கை, நுால்களின் வகை, அரிய நுால்கள் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது உள்ளிட்ட விபரங்களுடன், 'மாவட்ட நுாலக அலுவலர், மாவட்ட நுாலக ஆணைக்குழு, கோட்டை மெயின்ரோடு, உழவர் சந்தை அருகில், நாமக்கல் - 637001' என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

விருதுக்கு, dlonkoffice@gmail.com என்ற இணையதள முகவரி மற்றும் நேரில் அல்லது தபால் மூலமாக, வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட நுாலக அலுவலகத்தை, 9894074616 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us