sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாரதியார், ராஜாஜி பிறந்தநாள் விழா

/

பாரதியார், ராஜாஜி பிறந்தநாள் விழா

பாரதியார், ராஜாஜி பிறந்தநாள் விழா

பாரதியார், ராஜாஜி பிறந்தநாள் விழா


ADDED : டிச 13, 2024 08:52 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு நுாலக வாசகர் வட்டம் மற்றும் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில், மகாகவி பாரதியார், மூதறிஞர் ராஜாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நுாலகர் செல்வம் வர-வேற்றார். மனவளக்கலை மன்ற பேராசிரியர் உழவன் தங்கவேலு முன்னிலை வகித்தார். நாமக்கல் தமிழ் சங்கத் தலைவர் டாக்டர் குழந்-தைவேல் தலைமை வகித்தார். அங்கு பாரதியார், ராஜாஜி உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வளையப்-பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசி-ரியர் தமிழ்ச்செல்வனுக்கு மகாகவி பாரதியார் விருதும், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பழையபாளையம் சிவகுமாருக்கு ராஜாஜி விருதையும் வழங்கினார்.

பேராசிரியர் அரசு பரமேசுவரன் தலைமையில் 'பாரெங்கும் பாரதி' என்ற கருத்தரங்கம் நடை-பெற்றது. பேராசிரியர் கந்தசாமி, 'விடுதலை வேட்கை பாடல்கள்' தலைப்பிலும், பேராசிரியை பிரபா 'பெண்கள் முன்னேற்ற பாடல்கள்' தலைப்-பிலும், கவிஞர் சேந்தை செழியன் 'சமூக முன்-னேற்ற பாடல்கள்' தலைப்பிலும், கல்லுாரி மாணவர் சக்திவேல் 'குழந்தைகள் பாடல்கள்' தலைப்பிலும் பேசினர்.

விழாவில், ஆசிரியர் தமிழ்ச்செல்வன் எழுதிய 'கவிபாரதி' குழந்தைகள் பாடல் நுால் வெளியி-டப்பட்டது. வாசகர் வட்ட துணைத்தலைவர் அமல்ராஜ் இனிப்பு வழங்கினார். பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் நடை-பெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்-றிதழ்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us