/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

ADDED : டிச 15, 2025 07:42 AM

நாமக்கல்: நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இங்கு, பாரதியாரின், 143வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் பழனி ஜி பெரியசாமி, துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் கலைமணி, தாளாளர் கண-பதி, முதன்மையர் பெரியசாமி, தேர்வு கட்டுப்-பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம், துணை முதல்வர் கோகுல கண்ணன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.
விழாவில், தமிழாய்வுத்துறை பேராசிரியர் கண்ணன், பாரதியார் பற்றிய கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம், பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சீர்மிகு கருத்துக்களால் மாணவர்களுக்கும், பேராசிரியர்-களுக்கும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு போட்-டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கினர். அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர், அலுவலக பணியாளர்கள் கலந்து-கொண்டனர்.