/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாரதிய மஸ்துார் சங்க ஸ்தாபன தின விழா
/
பாரதிய மஸ்துார் சங்க ஸ்தாபன தின விழா
ADDED : ஜூலை 24, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் மாவட்ட பி.எம்.எஸ்., சார்பில், பாரதிய மஸ்துார் சங்கத்தின், 71-வது ஸ்தாபன தின விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, சுமைப்பணி தொழிலாளர் சங்கம், நகர பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் நடந்தது.
மாவட்ட பி.எம்.எஸ்., தலைவர் பாலசுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரத்தினம், கூட்ஸ் ஷெட் சங்க பொறுப்பாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை செயலாளர் குணசேகரன், கிளை தலைவர் பூபாலன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.