தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பாரதிய போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பாரதிய போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பாரதிய போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : மே 07, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:பாரதிய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தமிழக அரசு போக்குரவத்து கழக பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் பங்கேற்றார். அதில், நாமக்கல், 2ம் பணிமனையில் கன்ட்ரோல் செக்ஷனில் எம்.பி.எப்., தொழிற்சங்கத்தினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது; காழ்ப்புணர்ச்சி காரணமாக, கிளை நிர்வாகத்துடன் இணைந்து எங்களுடைய பி.எம்.எஸ்.,-பி.பி.எம்.எம்., கிளை நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் செய்து சம்பளம் பிடித்தம் செய்திருப்பதை கண்டிக்கிறோம்.

பாஸ்டிங் பஸ்சில் இருந்து மாற்று பஸ் பணிக்கு ஒதுக்கீடு செய்து தொல்லை கொடுப்பது, இதுகுறித்து, கிளை மேலாளர், துணை மேலாளர், பொதுமேலாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்னை தொடராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினர். பேரவை செயலாளர்கள் முருகேசன், குணசேகரன், மண்டல தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us