sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருமணிமுத்தாறு - காவிரி இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஈஸ்வரன் உறுதி

/

திருமணிமுத்தாறு - காவிரி இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஈஸ்வரன் உறுதி

திருமணிமுத்தாறு - காவிரி இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஈஸ்வரன் உறுதி

திருமணிமுத்தாறு - காவிரி இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஈஸ்வரன் உறுதி


ADDED : அக் 03, 2024 07:19 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''திருமணிமுத்தாறு - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றக்கோரி, முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். திட்டம் நிறைவேற்றப்படும் என, முதல்வரும் உறுதி அளித்துள்ளார். விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்,'' என, கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கூறினார்.

இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் கூறியதாவது:மதுக்கடைகளை படிப்படியாக குறைத்தாலும், மதுவை முழுமையாக ஒழிக்க முடியாது. மதுக்-கடைகளை மூடுவதால் மட்டும் மதுவை ஒழித்து விட முடியாது. மதுக்கடையை படிப்படியாக குறைப்பது என்பது, அதற்கு தீர்வு அல்ல. துணை முதல்வர் உதயநிதி, அரசியலுக்கு வந்தபோதும், இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்-பட்டபோதும், சட்டசபை வேட்பாளராக அறிவித்த போதும், அமைச்சர் ஆகும் போதும் பலர் விமர்-சனம் செய்தனர்.அவர் எடுத்துக்கொண்ட பதவி, பொறுப்புகளில் சிறப்பாக செய்துள்ளாரா, இல்லையா. ஏதாவது குறை இருக்கிறதா, குற்றச்சாட்டு இருக்கிறதா என பார்க்க வேண்டும். விளையாட்டுத்துறை இப்போது சிறப்பாக செயல்படுகிறதா, இல்-லையா.தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக, 40 சதவீத குற்றச்சம்பவம் அதிகரித்துள்ளதாக கவர்னர் சொல்வது, அரசியலுக்காக சொல்கிறார். எந்த டேட்டா வைத்து விபரங்கள் சொல்கிறார் என தெரியவில்லை. அவினாசி- - அத்திக்கடவு திட்டம், பல்வேறு போராட்டங்களுக்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், திரும-ணிமுத்தாறு - காவிரி இணைப்பு திட்டம் நிறை-வேற்றக்கோரி, முதல்வரிடம் கோரிக்கை விடுத்-துள்ளோம். திட்டம் நிறைவேற்றப்படும் என, முதல்வரும் உறுதி அளித்துள்ளார். விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.எம்.பி., மாதேஸ்வரன், கொ.ம.தே.க., நிர்வாகிகள் மணி, துரை, ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us