/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டையில் நடந்த ரேக்ளா போட்டியில் பவானி குதிரைகள் அசத்தல்
/
நாமகிரிப்பேட்டையில் நடந்த ரேக்ளா போட்டியில் பவானி குதிரைகள் அசத்தல்
நாமகிரிப்பேட்டையில் நடந்த ரேக்ளா போட்டியில் பவானி குதிரைகள் அசத்தல்
நாமகிரிப்பேட்டையில் நடந்த ரேக்ளா போட்டியில் பவானி குதிரைகள் அசத்தல்
ADDED : ஜன 16, 2024 10:51 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் நடந்த ரேக்ளா போட்டியில், பவானியை சேர்ந்த இரண்டு குதிரைகள் பரிசுகளை வென்றன.
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் நண்பர்கள் குழு மற்றும் சசிகுமார் நண்பர்கள் குழு சார்பில், ரேக்ளா போட்டி நடந்தது. இதில், நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன. குதிரைகளின் உயரங்களை கணக்கிட்டு பெரிய குதிரை, 8, 10 கிலோ மீட்டர், சிறிய குதிரை, 8 கிலோ மீட்டர், நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட குதிரைகள், 6 கிலோ மீட்டர் தொலைவு என, 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, டவுன் பஞ்., தலைவர் சேரன், துணைத்தலைவர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பெரிய குதிரையில், பவானி சிங்காரவேல் முதல் பரிசும், பிரபு, இரண்டாம் பரிசு, ஆத்துார் லக்கி ஸ்டார், மூன்றாம் பரிசு, திருச்சி ரித்தீஸ், நான்காம் பரிசை வென்றனர். அதேபோல், சென்னை ஆறுமுகம், குமாரபாளையம் சிங்காரவேல், சென்னை இப்ரான், திருச்சி உறையூர் தினேஷ் ஆகியோர் முதல் நான்கு பரிசை பெற்றனர்.
சிறிய குதிரையில், பவானி சிங்காரவேல் முதல் இரண்டு இடங்களையும், கோவை நவீன் பிரதர்ஸ் மூன்றாம் இடத்தையும், ராசிபுரம் பால்ராஜ், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மற்றொரு பிரிவில் கோவை கோகுல், குளித்தலை செல்லை வம்சம், சேலம் ஜாப்பர், குளித்தலை பில்லா ஆகியோர் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற குதிரை, ரைடருக்கு கோப்பை, ரொக்க பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆத்துார் பிரதான சாலையில் போட்டிகள் நடந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.