/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையத்தில் ரூ.3.60 கோடியில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
/
குமாரபாளையத்தில் ரூ.3.60 கோடியில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
குமாரபாளையத்தில் ரூ.3.60 கோடியில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
குமாரபாளையத்தில் ரூ.3.60 கோடியில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : மே 23, 2025 01:25 AM
குமாரபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.88 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கு, ரூ.22.50 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
தி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் மூர்த்தி, பணிகளை துவக்கி வைத்தார். குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜயகண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞான
சேகரன், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொ) அருள், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டிய நாடகம், கரகாட்டம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், விபத்து தடுப்பு குறித்து மக்களிடையே துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.