/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜி.ஹெச்.,ல் ஆய்வகம் கட்ட பூமி பூஜை
/
ஜி.ஹெச்.,ல் ஆய்வகம் கட்ட பூமி பூஜை
ADDED : ஜூலை 24, 2025 01:38 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அரசு தலைமை மருத்துவமனையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் கட்டும் பணியை, நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.முக., செயலாளர் மூர்த்தி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டட தரைத்தளத்தில், 1,367 சதுரடியில் நுண்ணுயிர் ஆய்வகம், பகுப்பாய்வு பகுதி, மாதிரி சேகரிப்பு அறை, காத்திருப்பாளர் அறை, ஆண், பெண்கள் கழிப்பறையும் அமைக்கப்படுகிறது.
முதல் தளம், 1,367 சதுரடியில் நோயியல் ஆய்வகம், திசு நோயியல் ஆய்வகம், தொழில்நுட்ப வல்லுநர் அறை, ரத்தவியல் ஆய்வகம், சேமிப்பு அறை, ஆண், பெண் கழிவறை அமைக்கப்படுகிறது. பூமி பூஜை விழாவில் திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட வக்கீல் அணி தலைவர் சுரேஷ்பாபு, திருச்செங்கோடு நகர தி.மு.க., பொறுப்பாளர்கள் நடேசன், கார்த்திகேயன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.