ADDED : டிச 02, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 24-வது வார்டில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை, கொட்டும் மழையில், நேற்று நடந்தது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர் ராணா ஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர்கள் நந்தி-னிதேவி, இளம்பரிதி, தெற்கு நகர துணை செயலாளர் புவனேஸ்-வரன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபாகரன், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.