/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்குக்கு ராசிபுரத்தில் பூமி பூஜை
/
ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்குக்கு ராசிபுரத்தில் பூமி பூஜை
ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்குக்கு ராசிபுரத்தில் பூமி பூஜை
ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்குக்கு ராசிபுரத்தில் பூமி பூஜை
ADDED : நவ 25, 2025 02:01 AM
ராசிபுரம், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது.
கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர், பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
முன்னள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோகிலா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சங்கர், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.