ADDED : மே 28, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி : எருமப்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான திருவிழா, கடந்த, 12ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 19ல் இரண்டாம் காப்பு கட்டுதலும், நேற்று முன்தினம், கருப்பணார், பிள்ளையார் சக்தி அழைத்தல் நடந்தது. தொடர்ந்து, நேற்று பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், முக்கிய நிகழ்ச்சியான பூமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அலகு குத்தி அக்னி சட்டி எடுத்து மகா மாரியம்மனுக்கு வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.