ADDED : ஜூன் 04, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்து, பீஹார் தொழிலாளி பலியானார்.
பள்ளிப்பாளையம்
அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த பொட்லிபாளையம் பகுதியில்,
பீஹாரை சேர்ந்த சுஜித், 26, அசோக், 25, ஆகிய இருவரும், கடந்த, 1ல்
கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது
எதிர்பாராதவிதமாக பழைய சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. இதில்,
வடமாநில தொழிலாளி இருவரும் படுகாயமடைந்தனர். அருகில்
இருந்தவர்கள் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சுஜித் உயிரிழந்தார். கொக்கராயன்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
