/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பைக் மெக்கானிக் மகள் நீட் தேர்வில் சாதனை
/
பைக் மெக்கானிக் மகள் நீட் தேர்வில் சாதனை
ADDED : ஜூன் 20, 2025 01:12 AM
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் அருகே, அரசு பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில், 547 மதிப்பெண்கள் பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ராசிபுரம் அருகே அணைப்பாளையம், பிள்ளப்பநாய்க்கனுாரை சேர்ந்தவர் இதயராஜன், பைக் மெக்கானிக். இவரது மகள் மெய்யரசி.
இவர் புதுச்சத்திரம் யூனியன், பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வில் பங்கேற்ற இவர், 547மதிப்பெண்கள் பெற்றதுடன், அரசு பள்ளியில் படித்ததற்காக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவி மெய்யரசியை நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், அட்மா குழு தலைவர் கவுதம் ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இதே அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி ஹரிணி, 592 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் இதே பள்ளியில், 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த மாணவி தர்ஷினிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கர் உள்ளிட்ட ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.