sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

27ல் நன்னீர் மீன் வளர்ப்பில் உயிரியல் பாதுகாப்பு, உணவு மேலாண் பயிற்சி

/

27ல் நன்னீர் மீன் வளர்ப்பில் உயிரியல் பாதுகாப்பு, உணவு மேலாண் பயிற்சி

27ல் நன்னீர் மீன் வளர்ப்பில் உயிரியல் பாதுகாப்பு, உணவு மேலாண் பயிற்சி

27ல் நன்னீர் மீன் வளர்ப்பில் உயிரியல் பாதுகாப்பு, உணவு மேலாண் பயிற்சி


ADDED : ஜூன் 23, 2025 05:00 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'வரும், 27ல், நன்னீர் மீன் வளர்ப்பில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவு மேலாண் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 27 காலை, 10:00 மணிக்கு, 'நன்னீர் மீன் வளர்ப்பில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவு மேலாண்மை' என்ற தலைப்பில், ஒரு நாள் இல-வச பயிற்சி முகாம் நடக்கிறது.

இப்பயிற்சியில், மீன் பண்ணை குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணை குட்டை அமைத்தல், மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்-திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள், சந்தைப்ப-டுத்துதல் முறைகள் குறித்து விளக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில், துணை பொது மேலாளர்

பங்கேற்று, மீன் வளர்ப்பு

விவசாயிகளுக்கு மீன் தீவன உற்பத்தி பற்றி விரிவாக எடுத்து-ரைக்க உள்ளார்.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, இந்த ஆண்டிற்கான மீன் குஞ்சுகள் இடுபொருட்கள் வழங்குவதில், நாமக்கல் மாவட்ட மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

இதில், வேலையில்லாத

பட்டதாரிகள், விவசாயிகள்,

இல்லத்தரசிகள், மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள-வர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள்,

முதுநிலை கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை, நேரிலோ அல்லது 04286-266345, 266650, 7358594841 ஆகிய தொலைபேசி மற்றும் மொபைல் போனில் தொடர்பு கொள்-ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us