/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரியாணி சாப்பிடும் போட்டி 2.5 கிலோ சாப்பிட்டவர் வெற்றி
/
பிரியாணி சாப்பிடும் போட்டி 2.5 கிலோ சாப்பிட்டவர் வெற்றி
பிரியாணி சாப்பிடும் போட்டி 2.5 கிலோ சாப்பிட்டவர் வெற்றி
பிரியாணி சாப்பிடும் போட்டி 2.5 கிலோ சாப்பிட்டவர் வெற்றி
ADDED : ஜன 10, 2025 02:27 AM

மோகனுார்:நாமக்கல்லில், சேலம் -மோகனுார் சாலையில், காலித் என்ற ஹோட்டல் செயல்படுகிறது. இங்கு, நேற்று மதியம் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடந்தது. இதில், மூன்று பெண்கள் உட்பட, 50 பேர் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவில், சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த லாரி பட்டறை தொழிலாளி பிரபு, 2.50 கிலோ பிரியாணி சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். இவருக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 2.39 கிலோ பிரியாணி சாப்பிட்ட ஜெகதீஸ் இரண்டாம் இடம், 2.15 கிலோ பிரியாணி சாப்பிட்ட முத்து மூன்றாமிடம், 2.05 கிலோ சாப்பிட்ட கணேசபுரத்தைச் சேர்ந்த பிரபு நான்காம் இடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில், அன்பு நகரைச் சேர்ந்த நித்யா, 1.50 கிலோ பிரியாணி சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். அவருக்கு, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.