/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நவ., 4ல் பா.ஜ.,தலைவர் சுற்றுப்பயணம்
/
நவ., 4ல் பா.ஜ.,தலைவர் சுற்றுப்பயணம்
ADDED : அக் 24, 2025 01:20 AM
நாமக்கல், நாமக்கல் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: நவ., 4ஆம் தேதி பா.ஜ., மாநில தலைவரின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பிலான சுற்றுப்
பயணம், நாமக்கல் குளக்கரை திடலில் நடைபெற உள்ளது. பா.ஜ., அங்கம் வகிக்கும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில், மழை காரணமாக நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டன. அரசு தரப்பில் இருந்து பாதுகாக்க விவசாயிகளுக்கு தார்பாய்கள் கூட வாங்கித் தரவில்லை.
கரூரில் மட்டும் ஆளுங்கட்சியின் ஊது குழலாக பேரிடர் மேலாண்மை துறை அமுதா செயல்பட்டுள்ளார். தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்களை, சில அரசியல் கட்சிகள் பிரித்து விட்டால், அதனை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என, தி.மு.க., கருதுகிறது. அந்த நிலை இருக்கக் கூடாது என்பதை நிலை நாட்டுவதற்காக, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்
பயணம் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நவ., 4ம் தேதி கட்சி தலைவரின் சுற்றுப்பயணம் நடைபெறும். இதில் மத்திய இணை அமைச்சர் முருகன், கூட்டணி கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்வர்.
சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி மறைவுக்கு, பா.ஜ., சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு கூறினார்

