/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு
/
பா.ஜ., சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு
பா.ஜ., சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு
பா.ஜ., சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : ஆக 21, 2025 02:12 AM
நாமக்கல், கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சுதந்திர போரட்ட வீரர் ஒண்டிவீரனின், 254வது நினைவு தினம், நாமக்கல் மணிக்கூண்டு அருகே, நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராம்குமார் முன்னிலை
வகித்தார்.
அதில், பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்று, ஒண்டிவீரன் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகே, தமிழ் புலிகள் கட்சி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில் மாலையிட்டு மலர் துாவி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.