ADDED : ஜூலை 18, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., சார்பில், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில், மக்களின் அடிப்படை பிரச்னைகளான சாக்கடை கழிவுநீர் அகற்றக்கோரியும், மதுபான கடை இடமாற்றம், குடிநீர் பிரச்னை,
புதுச்சத்திரம் மற்றும் புதன் சந்தை ஊருக்குள் தனியார், அரசு பஸ் வந்து செல்லவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, அடிப்படை வசதிகளை செய்து தராத வட்டார வளர்ச்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய தலைவர் செல்வம் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் சத்யமூர்த்தி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணை தலைவர் லோகேந்திரன், கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.