ADDED : ஏப் 08, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
எருமப்பட்டி, மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி பஞ்., பகுதியை சேர்ந்தவர் தத்துவம். இவர், சில நாட்களுக்கு முன், பஞ்., பகுதியில், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதில்லை. மயானத்தில் குப்பை அள்ளுவதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.
இந்நிலையில், மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தத்துவம், தன் வீட்டில் கருப்பு கொடியேற்றி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு செய்துள்ளார்.
