ADDED : ஆக 21, 2026 05:36 AM

அ நிறம் | அளவு
ப.வேலுார்:ஜேடர்பாளையம்
வழியாக, அனுமதியின்றி கருங்கற்கள் கடத்துவதாக போலீசாருக்கு
தகவல் கிடைத்தது
இதையடுத்து எஸ்.ஐ., லோகேஷ் தலைமையில், போலீசார்
திடுமல் பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நல்லுாரில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி வந்த லாரியை
நிறுத்தினர். பஞ்சப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ், 32, லாரியை ஓட்டி
வந்தார்.போலீசார் சோதனையில், லாரியில் கருங்கற்கள் இருந்தது
தெரியவந்தது. அனுமதி இன்றி முறைகேடாக நல்லுார் பகுதியில் இருந்து
கருங்கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஜேடர்பாளையம்
போலீசார், லாரி டிரைவர் தேவராஜை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
