/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
/
ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
ADDED : மே 26, 2024 07:32 AM
வெண்ணந்துார் : வெண்ணந்துாரில், 15 வார்டுகள் உள்ளன. இதில், மல்லுார் செல்லும் சாலையில் உள்ள சீரங்க கவுண்டர் காடு பகுதி, 4-வது வார்டில், 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஓடை வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை சாலை வசதியாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் ஓடை புறம்போக்கு வழியாக சென்று, வாய்க்காலில் கலந்துவிடும்.
சில நேரங்களில் மழை அதிகமாக பெய்யும்போது, அப்பகுதி முழுக்க மழை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கும். மேலும், காலம் காலமாக உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தை, தனி நபர்கள் சிலர் ஓடை ஓரமாக கள்ளுக்கட்டு அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். மழைநீர் செல்ல ஏதுவாக இருந்த அந்த ஓடை வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
மழை பெய்யும்போது மழை தண்ணீர் சாலையில் தேங்கி நின்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு ஓடை நிலத்தை மீட்டு மழைநீர் செல்லவும், மேலும் சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். வெண்ணந்துார் இன்ஸ்பெக்டர் சுகவனம், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.