sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

/

அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்


ADDED : ஜூலை 11, 2024 12:41 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், மாரப்பம்பா-ளையம் அருந்ததியர் தெரு அருகே, 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள், கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தா-ரிடம், ஓராண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். காலதாம-தமானதால், மா.கம்யூ., சார்பில், சில வாரங்களுக்கு முன் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஆர்.ஐ., அனுராதா, துணை தாசில்தார் கனகலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று அளவீடு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் பணிகள் முழுமை பெறவில்லை. இதுகுறித்து அப்ப-குதி மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எங்களுக்கு இன்று நேரமில்லை; இன்னொரு நாள் வந்து அளவீடு செய்து தரு-கிறோம்' என, பதிலளித்துள்ளனர். இதனால், கோபமடைந்த மக்கள், கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், சாலை மறியலில் ஈடு-பட்டனர். ஆர்.ஐ., அனுராதா முழுமையாக அளவீடு செய்து தருவ-தாக உத்திரவாதம் அளித்ததையடுத்து, மக்கள் மறியலை கைவிட்-டனர். இதனால் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us