/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
/
அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
ADDED : ஏப் 13, 2025 04:09 AM
ப.வேலுார்: ப.வேலுார் அரிமா சங்கம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ கல்-லுாரி சார்பில், ப.வேலுார் பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் ரத்ததான முகாம், நேற்று நடந்தது. ப.வேலுார் அரிமா சங்க தலைவர் சிவக்குமார் ரத்த தானம் கொடுத்து முகாமை துவக்கி வைத்தார்.
அரிமா சங்க செயலாளர் சாமிநாதன், தேவராஜ், பொருளாளர் அர-சகுமார் உள்பட அரிமா சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது-மக்கள், 52 பேர் ரத்த தானம் செய்தனர். முகாமில், நாமக்கல் மெடிக்கல் காலேஜ், டாக்டர் நவீன் ஆனந்த் தலைமை வகித்தார். பரமத்தி மருத்துவ அலுவலர் சுதமதி, வட்டார சுகாதார மேற்பார்-வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மணி-கண்டன், நவலடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

