/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரி
/
கமலாலய குளத்தில் மீண்டும் படகு சவாரி
ADDED : ஜூலை 26, 2024 03:08 AM
நாமக்கல்: நாமக்கல், கமலாலய குளத்தில் சுற்றுலா பயணிகளிகளுக்காக, மீண்டும் படகு சவாரி செய்ய ஏற்பாடு நடக்கிறது.
நாமக்கல், பூங்கா சாலையில் கமலாலய குளம் அமைந்துள்ளது. அதன் அருகே கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி மூலம் அம்மா பூங்கா அமைக்கப்-பட்டது. அப்போது செயற்கை நீர்வீழ்ச்சி, குழந்தைகள் விளை-யாடும் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு உபகரணங்கள் அமைக்-கப்பட்டிருந்தது. அங்கு தினமும் ஏராளமான மக்கள் குடும்பத்-தோடு வந்து குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பின், அம்மா பூங்கா பரா-மரிப்பு கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தற்போது பூங்காவை சீரமைக்கும் பணி நகராட்சி நிர்வாகத்தால் துவங்கப்பட்டுள்ளது. மேலும் குளத்தில் படகு சவாரி செய்ய ஏற்-பாடு நடந்து வருகிறது. அதற்காக கேரள மாநிலத்தில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட, 4 பெடல் படகுகள், ஒரு விசை படகு தயாரிக்கப்பட்டு, நேற்று லாரிகள் மூலம் நாமக்கல்-லுக்கு கொண்டு வரப்பட்டு கிரேன் மூலம் கட்டி, கமலாலய குளத்தில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அம்மா பூங்காவை புதுப்பிக்கும் பணி, படகு சவாரி ஆகியவை துவங்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

