/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயில்வே தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் சடலம்
/
ரயில்வே தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் சடலம்
ADDED : அக் 31, 2025 12:46 AM
நாமக்கல்,  நாமக்கல் அருகே ரயில்வே தண்டவாளத்தில், தலை சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
நாமக்கல் மாநகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அடுத்த வேட்டைக்காரன்புதுார் அருகே ரயில்வே தண்ட வாளத்தில் நேற்று காலை, ஆண் சடலம் ஒன்று தலை சிதைந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியை சேர்ந்த ஆனந்த்குமார், 47, என்பது தெரிய வந்தது.
லாரி டிரைவரான இவர் எதற்காக இங்கு வந்தார்? ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா என, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

