ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல், புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்; எழுத்தாளர். இவர் எழுதிய 'வ(லி)ழிப்போக்கன்' என்ற கவிதை புத்தகம் வெளியீட்டு விழா, நாமக்கல்லில் நடந்தது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தலைமை வகித்தார். வக்கீல் சுகுமார் வரவேற்றார்.
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கவிதை புத்தகத்தை வெளியிட்டு பேசினார். கொ.ம.தே.க., நிர்வாகிகள் சூரியமூர்த்தி, மணி, சந்திரசேகரன், ரவிச்சந்திரன், கந்தசாமி மற்றும் டாக்டர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், புத்தக எழுத்தாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

