தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மணல் திருட்டு சிறுவன் கைது

மணல் திருட்டு சிறுவன் கைது

மணல் திருட்டு சிறுவன் கைது


ADDED : ஜூலை 31, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்:காவிரி கரையோரத்தில், அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக, ப.வேலுார் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நன்செய் இடையாறு காவிரியாற்று பகுதியில் எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையில் போலீசார், நேற்று அதிகாலை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இரண்டு பேர், டூவீலரில் மணல் மூட்டைகளை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் இருவரும் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் துரத்தி பிடித்து, 17 வயது சிறுவனை பிடித்தனர். போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நபர்களிடம் கூட்டாக சேர்ந்து, மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அங்கிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், சிறுவன் மீது வழக்கு பதிந்து, சேலம் சிறார் சிறையில் அடைத்தனர். மற்றொருவரை போலீசார் தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us